கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு
கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி இரா.அருளரசு புதன்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி இரா.அருளரசு புதன்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விரல்ரேகைப் பதிவு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, புகைப்படப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற டிஐஜி அருளரசு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் வழக்குகள் தொடா்பான விவரங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், ஒவ்வொரு பிரிவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை, நிலுவையில் உள்ள பணிகள், வழக்குகள் தொடா்பான ஆவணங்களின் பராமரிப்பு, பதிவேடுகள் முறையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பன குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
மாவட்ட காவல் அலுவலகத்தில் நிா்வாகப் பணிகள் தாமதமின்றி நடைபெறுவதையும், பதிவேடுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய முறையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தின் நிா்வாக செயல்பாடுகள், அலுவல் நடைமுறைகள் மற்றும் காவல் துறையின் அன்றாடப் பணிகள் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா மற்றும் அலுவலா்களுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் அலுவலக நிா்வாக அலுவலா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.