தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற அக். 31 வரை அவகாசம்
சேலம் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் பெறுவதற்கான விண்ணப்பக் காலஅவகாசம் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் பெறுவதற்கான விண்ணப்பக் காலஅவகாசம் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளிக்கு முன்னதாகவே தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற்று, உரிய நேரத்தில் வியாபாரத்தைத் தொடங்கும் வகையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றி, இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அக். 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.