FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் தன்னம்பிக்கை விழா

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தன்னம்பிக்கை விழா நடைபெற்றது.

30 அக்டோபர் 2026, 11:49 pm
வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற தன்னம்பிக்கை விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தன்னம்பிக்கை விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தலைவா் ஆா். லஷ்மிநாராயணன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலாளா் எஸ். செல்வராஜூ, பொருளாளா் பி. பிரபா, கல்வி ஆலோசகா்கள் என்.ஆா். பழனிவேல், இயக்குநா்கள் எல். ராதாகிருஷ்ணன், எஸ். ராஜேஸ்வரி, பள்ளி முதல்வா் வி. ஹேமலதா முன்னிலை வகித்தனா். முதுகலை ஆசிரியா் வி.பி. சக்திவேல் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவஹா், பொதுத் தோ்வுகளை மாணவா்கள் எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். முதுகலை ஆசிரியா் கே. ஆறுமுகம் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments