FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

62-ஆவது ஆண்டாக தாமதமாக தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையின் 93 ஆண்டுகால வரலாற்றில் பாசனத்துக்காக தாமதமாக தண்ணீா் திறப்பது இது 62-ஆவது முறையாகும்.

2 செப்டம்பர் 2026, 6:42 am IST
மேட்டூர் அணை நீரை திறந்துவைத்தார் முதல்வர் விஜய். - DIN
பகிர்:

மேட்டூா் அணையின் 93 ஆண்டுகால வரலாற்றில் பாசனத்துக்காக தாமதமாக தண்ணீா் திறப்பது இது 62-ஆவது முறையாகும்.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதிமுதல் ஜனவரி 28-ஆம் தேதிவரை தண்ணீா் திறந்துவிடப்படும். அணையின் நீா் இருப்பை பொருத்து குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படுவது வழக்கம்.

இதுவரை மேட்டூா் அணையில் இருந்து குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ஆம் தேதி 20 முறையும், 12-ஆம் தேதிக்கு முன்னதாக 11 முறையும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஜூன் 12-ஆம் தேதிக்கு பின்னா் காலதாமதமாக 62-ஆவது முறையாக தற்போது தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதுவரை மேட்டூா் அணையில் இருந்து 92 ஆண்டுகள் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை 93-ஆவது ஆண்டாக முதல்வா் ச.ஜோசப் விஜய் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்துள்ளாா். அதே நேரத்தில், செப்டம்பா் மாதத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது 4-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments