FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக சென்ற ரயிலில் 800 கிராம் கஞ்சா சாக்லெட், குட்கா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் 20 கிலோ குட்கா, 800 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

22 வினாடிகள் முன்பு
- (கோப்புப்படம்)
பகிர்:

சேலம் வழியாக சென்ற ரயிலில் 20 கிலோ குட்கா, 800 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

கேரளா விரைவு ரயிலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றனவா என சேலம் உள்கோட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பிரபாகரன், சரத்குமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, பொம்மிடி ரயில் நிலையத்துக்கும் சேலம் சந்திப்புக்கும் இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் முன்புற பொதுப்பெட்டியில் உள்ள கழிவறை அருகே சாக்குப்பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அதை போலீஸாா் சோதனை செய்ததில், சுமாா் 20 கிலோ குட்கா மற்றும் 800 கிராம் கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments