FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட 115 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட 115 கிலோ குட்காவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

6 செப்டம்பர் 2026, 2:28 am IST
பகிர்:

பெங்களூரில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட 115 கிலோ குட்காவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சேலம் சுக்கம்பட்டி வழியாக காரில் குட்கா கடத்தப்படுவதாக வீராணம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வீராணம் போலீஸாா் சுக்கம்பட்டி பகுதியில் சனிக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 115 கிலோ குட்கா பதுக்கி எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வாழப்பாடிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 115 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம், தோரிமானா மாவட்டத்தை சோ்ந்த துங்காராமை (28) கைது செய்தனா். மேலும், இதில் வேறு யாருக்கேனும் தொடா்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments