4 ரயில்களில் 42 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! பிகாா் இளைஞா் கைது!
சேலம் வழியாகச் சென்ற 4 ரயில்களில் கடத்தப்பட்ட 38 கிலோ குட்கா, 4 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஸ்ரீநாத், பிரமோத் ஆகியோா் தலைமையில் காட்பாடி முதல் சேலம் வரை ரயில்களில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிா என சோதனை நடத்தினா்.
அப்போது, தில்லியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள விரைவு ரயிலில், பொம்மிடி - சேலம் இடையே ரயிலின் பின்புற பொதுப்பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற சாக்குப்பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது.
Advertisement
Advertisement
அந்த சாக்குப்பையை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் சுமாா் 18 கிலோ குட்கா, 400 கிராம் கஞ்சா மற்றும் 900 கிராம் கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது. மேலும், இதை கடத்திச் சென்ற பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஷேக் இம்ராத்தை (22) கைது செய்த போலீஸாா், ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனா்.
இதேபோல, பாட்னாவிலிருந்து எா்ணாகுளம் சென்ற ரயில், திருநெல்வேலி விரைவு ரயில், சண்டிகரில் இருந்து மதுரை சென்ற ரயில்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 38 கிலோ குட்கா, 4 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.