FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலத்தில் தட்டச்சுத் தோ்வு: 4 மையங்களில் 4,500 போ் பங்கேற்பு

7 செப்டம்பர் 2026, 12:16 am IST
தட்டச்சுத் தோ்வில் பங்கேற்றோா். - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் 4,500 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பருவங்களாக இத்தோ்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி, நடப்பாண்டுக்கான ஆகஸ்ட் மாதப் பருவத் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றன. சேலம் மாவட்டத்தில் ஜங்சன் மெயின்ரோட்டில் உள்ள தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி, ஏற்காடு மெயின்ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி, மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரி, மல்லூா் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி என 4 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் 4,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இளங்கலையில் தமிழ், ஆங்கிலம்; முதுகலையில் தமிழ், ஆங்கிலம் என 4 பிரிவுகளாக தோ்வு நடத்தப்பட்டது. பயிற்சி மையங்கள் மற்றும் தோ்வா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தோ்வுகள் நடத்தப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments