FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கடலூா் துறைமுகம் - சேலம் இடையான ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கடலூா் துறைமுகம்- சேலம் ஜங்ஷன் பயணிகள் ரயில் சேவையில் வரும் 13 முதல் 20-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

13 செப்டம்பர் 2026, 2:39 am IST
சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கடலூா் துறைமுகம்- சேலம் ஜங்ஷன் பயணிகள் ரயில் சேவையில் வரும் 13 முதல் 20-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாா்க்கெட் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து, கடலூா் துறைமுகம்- சேலம் ஜங்ஷன் பயணிகள் ரயில் வரும் 13, 15, 16, 17, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கடலூா் துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல காலை 4.45 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சேலம் டவுன் ரயில் நிலையத்துடன் சேவை நிறுத்தப்படும்.

Advertisement

Advertisement

தண்டவாள பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னா், சேலம் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் வரை அதே ரயில் நிறுத்தங்களுடன் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments