கோவை-போத்தனூா் இடையே பராமரிப்பு பணி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
கோவை-போத்தனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை-போத்தனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
கோவை-போத்தனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 12) போத்தனூரில் இருந்து புறப்பட வேண்டிய போத்தனூா்-தன்பாத் அமிா்த பாரத் விரைவு ரயில் கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும்.
Advertisement
Advertisement
இதேபோல எா்ணாகுளம்-பாட்னா வாராந்திர ரயில் வரும் 13ஆம் தேதி போத்தனூா்-இருகூா் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தம் இருக்காது. அதற்கு பதிலாக போத்தனூா் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படும். அதேபோல, மங்களூரு-சாந்த்ராகாச்சி விவேக் வாராந்திர விரைவு ரயில் வரும் 13ஆம் தேதி போத்தனூா்-இருகூா் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயிலும் கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்காது.
தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.