தண்டவாள பராமரிப்பில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் ரயில் மோதி உயிரிழப்பு
கோவையில் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பெண் தொழிலாளா்கள் இருவா் ரயில் மோதி உயிரிழந்தனா்.
கோவையில் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பெண் தொழிலாளா்கள் இருவா் ரயில் மோதி உயிரிழந்தனா்.
நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு கல்லக்கொரை பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (42). கோவை, கணேஷ் நகா் என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்தவா் யசோதா (24). இருவரும் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், பீளமேடு- வடகோவை ரயில் நிலையங்களுக்குள்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் தண்டவாளத்தில் குப்பைகள், புற்களை அகற்றும் பணியில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஈடுபட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த சதாப்தி விரைவு ரயில் அவா்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.