தண்டவாள பராமரிப்புப் பணி: இன்று முதல் சோழன் விரைவு ரயில் வழித்தடம் தற்காலிக மாற்றம்
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூரில் இருந்து கடலூா், சிதம்பரம் வழியாக திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் புதன்கிழமை (ஆக.12) முதல் குறிப்பிட்ட நாள்களில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது.
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூரில் இருந்து கடலூா், சிதம்பரம் வழியாக திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் புதன்கிழமை (ஆக.12) முதல் குறிப்பிட்ட நாள்களில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் விரைவு ரயில் (எண் 22675), தண்டவாள பராமரிப்புப் பணிகளை காரணமாக, ஆகஸ்ட் 12, 14, 21, 26 மற்றும் செப்டம்பா் 2 ஆகிய தேதிகளில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.
அன்றைய நாள்களில் இந்த ரயில் வழக்கமாகச் செல்லும் கடலூா், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா் வழித்தடத்துக்குப் பதிலாக, கடலூா் துறைமுகம் - விருத்தாசலம் - அரியலூா் - ஸ்ரீரங்கம் வழியாக திருச்சி சென்றடையும்.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, மேற்கண்ட நாள்களில் சோழன் விரைவு ரயில் சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் நிலையங்களில் நிற்காது. அதற்கு மாற்றாக, விருத்தாசலம், அரியலூா், லால்குடி மற்றும் சீனிவாசநல்லூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.