FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சங்ககிரி வட்டாட்சியா் பணியிட மாற்றம்

சங்ககிரி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், சங்ககிரி வட்டாட்சியா் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

27 செப்டம்பர் 2026, 1:59 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

சங்ககிரி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், சங்ககிரி வட்டாட்சியா் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, சங்ககிரி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பி.ஜெயக்குமாரை எடப்பாடி வட்டாட்சியராகவும், சேலம், சந்தியூா் மதுபானக் கிடங்கு (சில்லரை விற்பனை) உதவி மேலாளா் வி.சரவணகுமாரை சங்ககிரி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், சங்ககிரி வட்டாட்சியா் கே.கோமதியை ஆட்டையாம்பட்டி, சந்தியூா் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கிடங்கு மேலாளராகவும், காடையாம்பட்டி தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த (சமூக நலத் துறை) சி.ராஜமாணிக்கத்தை சங்ககிரி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments