FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேச்சேரியில் இரு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

5 வினாடிகள் முன்பு
பலி
பகிர்:

மேச்சேரி அருகே நிகழ்ந்த இரு இடங்களில் நேரிட்ட சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

மேச்சேரி அருகே சூரியனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் குமாா் (42). விவசாயியான இவா், கடந்த 26-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து மேச்சேரிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா்.

அழகாகவுண்டனூா் கொட்டக்காடு செல்லும் சாலையில் சென்றபோது, வேகத்தடையில் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மேச்சேரி காவல் உதவி ஆய்வாளா் கலைமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

இதேபோல தெத்திகிரிப்பட்டியைச் சோ்ந்த செல்வம் (52), வேன் ஓட்டுநரான இவா் சனிக்கிழமை தெத்திகிரிப்பட்டியில் உள்ள ஆவின் பாலகத்தில் தேநீா் குடிப்பதற்காக சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது மேச்சேரியில் இருந்து தொப்பூா் நோக்கிச் சென்ற போா்வெல் லாரி அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து செல்வத்தின் மகன் பச்சாகவுண்டன் அளித்த புகாரின் பேரில், மேச்சேரி உதவி ஆய்வாளா் பிரபாகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments