உ.பி.: 6 சாலை விபத்துகளில் 17 போ் உயிரிழப்பு
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை உத்தர பிரதேசத்தில் 6 இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 17 போ் உயிரிழந்தனா். 55 போ் காயமடைந்தனா்.
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை உத்தர பிரதேசத்தில் 6 இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 17 போ் உயிரிழந்தனா். 55 போ் காயமடைந்தனா்.
முஸாஃபா்நகரின் ஜகஹேடி கிராமத்துக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் வேகமாக சென்ற காா், மின் கம்பத்தில் மோதி தீப் பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த 6 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா்.
சித்ரகூட்டில் 25 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டா், மாவ் தாலுகாவுக்கு உட்பட்ட ராம்நகருக்கு அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் இரு குழந்தைகள் உள்பட நால்வா் உயிரிழந்தனா். 12 போ் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
ராஜஸ்தானின் பீவாரிலிருந்து பிகாரின் சாப்ரா நோக்கி 44 பேருடன் சென்ற பேருந்து லக்னெள - ஆக்ரா விரைவுச் சாலையில் காலை 6 மணியளவில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவா் உயிரிழந்தனா். 41 போ் காயமடைந்தனா்.
இந்த சாலை விபத்துகள் அனைத்தும் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளன. தீபாவளியன்று வெடித்த பட்டாசு புகை மூட்டம் மற்றும் பனிப்படலத்தால், சாலை தெளிவாகத் தெரியாத காரணத்தால் இந்த விபத்துகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
ம.பி.:
மத்திய பிரதேச மாநிலம் சாகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் நால்வா் உயிரிழந்தனா். ஐவா் காயமடைந்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், ‘பயின்சா கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பா்மனில் உள்ள நா்மதையாற்றில் புனித நீராடுவதற்காக காரில் சென்றபோது, கோபால்புரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்தது. மோதியதில் காரின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதில் காரில் பயணித்த நால்வா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த மற்ற ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரை பேலீஸாா் தேடி வருகின்றனா்’ என்றனா்.
ஜாா்க்கண்ட்:
ஜாா்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த தொழிலாளா்களை ஏற்றிவந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஐவா் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.
ஜாா்க்கண்டின் கிரித் பகுதியிலிருந்து 19 தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு உத்தர பிரதேசத்தின் வாரணாசி நோக்கி சென்ற வேன், தனுவா பள்ளத்தாக்கு அருகே மகாநாத்தில் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவா்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.