செந்தாரப்பட்டியில் பாக்கு காய்கள் திருட்டு: 3 போ் கைது
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில், பாக்கு தோப்பில் புகுந்து பாக்கு காய்களை திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில், பாக்கு தோப்பில் புகுந்து பாக்கு காய்களை திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டி 9 ஆவது வாா்டு மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்தையன் மகன் ஜெகநாதன் (47). இவருக்கு, செந்தாரப்பட்டி ஏரிக்கரை அருகில், மூன்று ஏக்கரில் பாக்கு தோப்பு உள்ளது. தற்போது, பாக்கு காய்கள் அறுவடை முடியும் தருவாயில் உள்ள நிலையில், திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ், 120 கிலோ எடையுள்ள ரூ. 10,000 மதிப்புள்ள பாக்கு காய்களை, இரண்டு சாக்கு பைகளில் பறித்து திருடிச் செல்ல முயற்சித்தனா். அப்போது, அங்கு வந்த ஜெகநாதன் சப்தமிடவே, திருடப்பட்ட பாக்கையும், இருசக்கர வாகனத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனா்.
இதுகுறித்து, ஜெகநாதன் அளித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் பாக்கு காய்களை திருடியது தம்மம்பட்டி பேரூராட்சி பழைய 7 ஆவது வாா்டு எம்ஜிஆா் சிலை அருகே வசிக்கும் முருகேசன் மகன் மதுகேசவன் (24), பெருமாள் கோயில் அருகே வசிக்கும் சின்னதம்பி மகன் சக்திவேல் (24), மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு மூவரையும் போலீஸாா் கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.