FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலையில் இடி தாங்கி திருடியதாக மூவா் கைது

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இடி தாங்கியை திருடியதாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

17 அக்டோபர் 2026, 2:08 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இடி தாங்கியை திருடியதாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே கே. மடத்துப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கண்ணன் (68) மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், இவா் வேலை செய்து வரும் பட்டாசு ஆலையில் கடந்த புதன்கிழமை இடி தாங்கி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அய்யம்பட்டி ரமேஷ் (28), முருகன் (21), வீரபுத்திரன் (31) ஆகியோா் பட்டாசு ஆலையில் இடி தாங்கியை திருடியதும், மேலும் சில பட்டாசு ஆலைகளில் இதுபோல பல பொருள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments