நத்தத்தில் விஸ்வகர்ம குருஜெயந்தி விழா
நத்தம் இந்து வர்த்தகர்கள் பொதுநலச்சங்க வளாகத்தில் உலகப் படைப்பாளி விஸ்வகர்ம குருஜெயந்தி விழாவையொட்டி உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் விசேஷ யாகபூஜை நடந்தது. இதில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நத்தம் இந்து வர்த்தகர்கள் பொதுநலச்சங்க வளாகத்தில் உலகப் படைப்பாளி விஸ்வகர்ம குருஜெயந்தி விழாவையொட்டி உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் விசேஷ யாகபூஜை நடந்தது. இதில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் இரும்பு, தச்சு, பாத்திரம், சிற்பம், நகை உள்ளிட்ட ஐந்தொழில் செய்யும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்ம சங்கத் தலைவர் சி.ரவீந்திரன், செயலாளர் முருகேசன், பொருளாளர் கேசவன், துணைத் தலைவர் சக்திவேல், துணைச் செயலாளர் சரவணன், விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் நத்தம், கோபால்பட்டி, முளையூர், சிறுகுடி, செந்துறை, அரவங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.