FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பழனி அருகே ஆலங்கட்டி மழை

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரப் பகுதியில் சனிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரப் பகுதியில் சனிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.

பழனியைச் சுற்றியுள்ள மடத்துக்குளம், தேக்கன்தோட்டம், கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்ததால், குளிர்ந்த சூழல் நிலவி வந்தது. ஆனால், பழனியில் வெயில் சுட்டெரித்தது.தொப்பம்பட்டி, அமரபூண்டி பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து, விவசாயப் பயிர்கள் வாடின. இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுமார் 45 நிமிடம் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவியது. பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.

பழனி நகரில் பிரதான சாலைகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து ஓடியது. பேருந்து நிலைய ரவுண்டானா அருகே சாலையில் தேங்கிய நீர் வெளியேற வழியில்லாததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments