பழனி வையாபுரி குளத்தை மேம்படுத்த ஆட்சியர் நடவடிக்கை
பழனி நகரின் நடுவே சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்தி மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழனி நகரின் நடுவே சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்தி மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழனியில் முந்தைய காலங்களில் ஏராளமான புனித தீர்த்தங்கள் இருந்துள்ளன. இதில் பலவும் அழிந்து விட்ட நிலையில் ஒருசில தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. நகரின் மையத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் முக்கியமானது வையாபுரி குளம்.
சுமார் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த குளத்தில் பக்தர்கள் நீராடி மலைக்கு சென்ற காலம் மாறி, தற்போது சாக்கடைகளின் சங்கமமாகி துர்நாற்றம் வீசி வருகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சென்னையை சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை நீதிபதி தனிச்செயலர் ஆகியோர் கடிதத்தைத் தொடர்ந்து கடந்த சிலதினம் முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வையாபுரி குளத்தை சீரமைத்து பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பல்வேறு துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த பணிகளின் போது பழனி திருக்கோயில் நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இப்பணிகளை பழனி கோட்டாட்சியர் கண்காணித்து துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வையாபுரி குளம் தொடர்பாக அனைத்து துறைகளும் தங்கள் முதல் அறிக்கையை வரும் 29ஆம் தேதியும், இரண்டாம் நிலை அறிக்கையை அக்டோபர் ஐந்தாம் தேதியன்றும் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.