FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சார்ஆட்சியரிடம் சிறுவியாபாரிகள் மனு

பழனியில் திருவிழா காலங்களில் அடிவாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள்  திறக்கப்படுகிறது. திருக்கோயில், நகராட்சி நிர்வாகங்கள் இணைந்து அடிக்கடி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வந்தனர். இதைத் தொடர்ந்து பழனி சார்ஆட்சியர் தலைமையில் இரு மாதங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் இடையூறின்றி தொழில் செய்ய அனுமதி கோரி சிறுவியாபாரிகள் மனு அளித்தனர். இதை பரிசீலனை செய்வதாக சார்ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

இதையடுத்து பழனி சிஐடியூ சாலையோர சிறு விற்பனையாளர் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை சார்ஆட்சியர் வினீத்திடம் மனு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், சிஐடியூ மாவட்ட தலைவர் மனோகரன், சிபிஐ நகர செயலாளர் குருசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மனுவுடன், சங்கத்தில் உள்ள அடிவாரம் சாலையோரம் தொழில் செய்யும் சிறுவியாபாரிகள் பெயர் பட்டியல், அவர்கள் பழனி பகுதியில்தான் வசிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments