FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பழனி நகராட்சி 9-ஆவது வார்டு வ.உசி. தெருவில் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. அதே பகுதியில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாயும் இல்லை. சாலையை சீரமைக்கவும், சாக்கடைகளும் கட்டித்தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.   இந்நிலையில் வெள்ளிக்கிழமை நகராட்சி சார்பில் ஜேசிபி இயந்திரங்களுடன் சாலையை சீரமைக்க ஒப்பந்தகாரர்கள் வந்தனர். ஆனால் சாக்கடைப் பணி முடியாமல் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

    நகராட்சி தரப்பில் கூறும்போது, சாலையை முதலில் அமைத்து விட்டு நிதி வந்த பின் சாக்கடை கட்டலாம் என்றோம். ஆனால் பொதுமக்கள் எதிப்புத் தெரிவித்ததால் சாலைப்பணிகளையும் தாற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments