234 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக பிரார்த்தனை
பழனியை அடுத்த தாமரைக்குளம் தானாக வளர்ந்த தங்க கனகம்மன் கோயிலில், அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டி சிறப்புப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
பழனியை அடுத்த தாமரைக்குளம் தானாக வளர்ந்த தங்க கனகம்மன் கோயிலில், அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டி சிறப்புப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பழனியை அடுத்த தாமரைக்குளம் அருள்மிகு தானாக வளர்ந்த தங்க கனகம்மன் திருக்கோயிலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறவும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.
தாமரைக்குளம் கிளைக் கழகச் செயலர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அருள்மிகு தங்க கனகம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, நகைகள், பட்டாடை சார்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
உச்சிக்காலத்தின்போது, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனையும், தமிழக தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.