FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே இளைஞர் கொலை சம்பவம்: அமமுக பிரமுகர் உள்பட 5 பேர் கைது

திண்டுக்கல் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அமமுக பிரமுகர் உள்பட 5 பேரை போலீஸார் புதன்கிழமை  கைது செய்தனர். 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:20 am IST
பகிர்:

திண்டுக்கல் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அமமுக பிரமுகர் உள்பட 5 பேரை போலீஸார் புதன்கிழமை  கைது செய்தனர். 
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜமால் முகமது. வழக்குரைஞரான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பாலுச்சாமி மகன் செல்வக்குமார்(35), குமரவேல், மருதுபாண்டி (26), முத்துப்பாண்டி (30), கன்னிவாடி புதுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா உள்பட 6 பேரை, செம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
 இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
 இந்நிலையில், செல்வக்குமார்,  முத்துப்பாண்டி, மருதுபாண்டி ஆகிய மூவரும், திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு, செவ்வாய்க்கிழமை ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அனுமந்தராயன்கோட்டை பிரிவு அருகே அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் செல்வக்குமாரை வெட்டிக் கொலை செய்தது. மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக  திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர்.
இதனிடையே, ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் உள்ள சோதனைச் சாவடி வழியாக காரில் தப்பிச்  சென்ற 4 பேர் போலீஸாரிடம் பிடிப்பட்டனர். விசாரணையில் அவர்கள் செல்வக்குமாரை கொலை செய்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திண்டுக்கல் அருகே மறைந்திருந்த மற்றொரு நபரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.  இதுதொடர்பாக போலீசார் கூறியது:
ஜமால்  முகமதுவின் தம்பி  கலில் ரகுமான் (35), சித்தையன்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த முகமது சலீம் (35), முகமது சலீத் (23), சதீஷ்குமார் (42), கடலூரைச் சேர்ந்த சமீர் அலி (25) ஆகியோர் இணைந்து செல்வக்குமாரை கொலை செய்துள்ளனர். கடந்த 2015-ல் நடந்த கொலைக்கு  பழிக்கு பழியாக செல்வகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர்களில் சதீஷ்குமார், அமமுக ஆத்தூர் ஒன்றிய செயலராக உள்ளார் என்றனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் திண்டுக்கல்  2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு  கொண்டு செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments