FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொடைக்கானல் கல்லூரியில் மேடை  நாடகங்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில புலமையை வெளிப்படுத்தும் மேடை நாடகங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில புலமையை வெளிப்படுத்தும் மேடை நாடகங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
    கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை கல்லூரித் தாளாளர் சாம் ஆப்ரகாம் தொடக்கி வைத்தார். அழிந்து வரும் பழங்கால மேடை நாடகங்களை மீண்டும் புதுப்பிக்கும் விதமாக  கல்லூரி மாணவ, மாணவிகள் எலிப்பொறி என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேடை நாடகம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி  மாணவிகள் மற்றும் பல்வேறு தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியானது தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இணை இயக்குநர் ரெபிய ராஜகுமாரி உள்ளிட்ட பல்வேறுத் துறைகளின் போராசிரியர்கள், மாணவர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments