FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆவின் தலைவராக முன்னாள் எம்எல்ஏ தேர்வு

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின்(ஆவின்) தலைவராக முன்னாள் அதிமுக எம்எல்ஏ

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின்(ஆவின்) தலைவராக முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஏ.டி.செல்லச்சாமி புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். 
திண்டுக்கல் மாவட்ட ஆவின் நிர்வாகக் குழு உறுப்பினருக்கான தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 17 இடங்களுக்கு, 17 பேர் மட்டுமே போட்டியிட்னர். இதனால் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, ஆவின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.  
 இதில், தலைவர் பதவிக்கு ஒட்டன்சத்திரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.டி.செல்லச்சாமி, தருமத்துப்பட்டியைச் சேர்ந்த ஆர்கே.சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட்டனர். அதேபோல், துணைத் தலைவர் பதவிக்கு சிவலிங்கம், சிவமுருகன், மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அலுவலர் ஆர்.இரணியன் முன்னிலையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் 12 வாக்குகளைப் பெற்ற ஏ.டி.செல்லச்சாமி வெற்றி பெற்றார். சிவசுப்பிரமணியன் 5 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
 அதேபோல் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 10 வாக்குகளைப் பெற்ற சிவலிங்கம் வெற்றி பெற்றார். சிவமுருகன் 5 வாக்குகளும், மோகன்ராஜ் 2 வாக்குகளும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments