FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே பள்ளி தொடக்க விழா

கொடைக்கானல் அருகே புதிய தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஜூன் 2018, 7:04 am IST
பகிர்:

கொடைக்கானல் அருகே புதிய தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
 வில்பட்டி ஊராட்சி பெருங்காடு ஆலத்துரைப் பகுதியில் ஆதிவாசிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி குழந்தைகள் சுமார் 10 கி.மீ. தூரமுள்ள பள்ளங்கி பகுதி அரசுப் பள்ளிக்கு நடந்தே சென்று படித்து வந்தனர். இதையடுத்து பெருங்காடு பகுதியில் அரசு சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 இந்நிலையில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு, இப்பள்ளியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு கொடைக்கானல் வட்டார கல்வி மைய அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சூர்ய பிரபா வரவேற்றார். கொடைக்கானல் சுழற் சங்கத் தலைவர் (தேர்வு) செல்வக்குமார் பள்ளியை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை, கீஸ்மோகன், மைக்கேல், பி.சி.கே.பள்ளியைச் சேர்ந்த சவரினா, சாந்தம் சதீஸ், சேது முருகன், தலைமை ஆசிரியர் பிரேம் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை பாண்டியம்மாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments