FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ரூ.8 கோடி மோசடி: தூத்துக்குடிதொழிலதிபர்  கைது

திண்டுக்கல் ஆலை  அதிபரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த தூத்துக்குடி தொழிலதிபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 26 ஜூன் 2018, 7:45 am IST
பகிர்:

திண்டுக்கல் ஆலை  அதிபரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த தூத்துக்குடி தொழிலதிபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அசோக்(35). மர அறுவை ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாதிபர் மீரான்(72) என்பவருடன் அசோக்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மீரான் பல்வேறு தொழில்களில்  ஈடுபட்டு வருவதாக  கூறப்படுகிறது. அப்போது, தூத்துக்குடி விமான நிலையம் அருகே, தனக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறிய மீரான், அதனை விற்பனை செய்யப் போவதாக அசோக்கிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, அந்த நிலத்தை தானே வாங்கி கொள்வதாக அசோக் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடியை, மீரானிடம் அசோக் கொடுத்தாராம். ஆனால், நிலத்தை எழுதிக்  கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அசோக், நிலத்திற்கான வில்லங்க சான்றிதழ் பெற்று பார்த்தபோது, அது வேறொரு நபருக்குச் சொந்தமானது என தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அசோக், மீரானிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.   ஆனால், பணத்தைத் திருப்பி வழங்காமல் மீரான் காலம் கடத்தி வந்துள்ளார்.  
இதனால் அதிருப்தி அடைந்த அசோக், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வினோதாவிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வி, மீரானை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments