திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகள், 3 நகராட்சிகளுக்குள்பட்ட 73 வார்டுகள், 23 பேரூராட்சிகளுக்குள்பட்ட 357 வார்டுகல் என மொத்தம் 478 பதவிகளுக்கான இத்தேர்தலில் 2062 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாவட்டத்தில் 747 வாக்குச்சாவடிகள் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பதவிகளுக்கான 10 வாக்குச்சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில் 183 வாக்குச் சாவடிகள், கொடைக்கானல் நகராட்சியில் 38 வாக்குச் சாவடிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 31 வாக்குச் சாவடிகள், பழனி நகராட்சியில் 71 வாக்குச் சாவடிகள், 23 பேரூராட்சிகளில் 414 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மொத்தம் 6,12,880 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் இரண்டு மணி நேரத்தில் 23 பேரூராட்சிகளில் 13.35 சதவீத வாக்குகளும், மூன்று நகராட்சிகளில் 11.93 சதவீத வாக்குகளும், திண்டுக்கல் மாநகராட்சியில் 9.45 சதவீத வாக்குகளும் பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.