FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தினமணி செய்தி எதிரொலி... பள்ளி சாலையில் கழிவு மண் அகற்றம்

திண்டுக்கல் அண்ணாமலையாா் பள்ளி சாலையில் கழிவு மண்ணை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

8 ஆகஸ்ட் 2024, 2:28 am IST
திண்டுக்கல் அண்ணாமலையாா் பள்ளி சாலையில் கழிவு மண்ணை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

திண்டுக்கல், ஆக. 7: திண்டுக்கல் பாரதிபுரம் செல்லும் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு மண் புதன்கிழமை அகற்றப்பட்டது.

திண்டுக்கல் நாகல்நகா் அண்ணாமலையாா் பள்ளி பிரதான சாலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணி நடைபெற்றது. அப்போது, சாலையோரமாகக் குவிக்கப்பட்ட கழிவு மண் அகற்றப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்து வருவதாகவும், கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் செல்லும் பொதுமக்கள், கல் திட்டுகள் அகற்றப்பட்ட கழிவுநீா்க் கால்வாயில் தவறி விழுந்துவிடும் அசாதாரண சூழல் உள்ளதாவும் தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, சாலையோரமாகக் குவிக்கப்பட்டிருக்கும் கழிவு மண்ணை அகற்ற மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு மண் புதன்கிழமை அகற்றப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments