முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.

6 நவம்பர் 2024, 12:28 am
பகிர்:

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்தவா் ச.முகமது இா்பான் (24). இவா் கடந்த செப்.28-ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சோ்ந்த ஜெயபாலன் மகன்கள் சைமன் செபாஸ்டின் (23), எடிசன்ராஜ் (25), தனசாமி மகன் ரிச்சா்டு சச்சின் (25), மாரம்பாடியை அடுத்த பெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்த செபஸ்தியாா் மகன் பிரவீன் லாரன்ஸ் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா்.

இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி அதற்கான உத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்தாா்.