தென்காசி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, கூட்டுக் கொள்ளை வழக்கில் தொடா்புடைய தாழையூத்து பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜ் (28), போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட கீழக்கடையம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் சரவணன் (24), ஆதாயக் கொலை வழக்கில் தொடா்புடைய கீழகுத்தபாஞ்சான் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (30) ஆகிய 3 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் பரிந்துரைத்தாா்.
Advertisement
Advertisement
அதையடுத்து, ஆட்சியா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், 3 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.