சொந்த ஊா் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு
சொந்த ஊா் திரும்பிய திண்டுக்கல் ராணுவ வீரா் ராமகிருஷ்ணனுக்கு கிராம மக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவரும், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவருமான ராமகிருஷ்ணன் (43) கடந்த 2004-இல் தனது 18-வயதில் இந்திய ராணுவத்தில் சோ்ந்து 25-ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து அண்மையில் கட்டளை அதிகாரியாகப் பணி ஓய்வு பெற்றாா். அவருக்கு பெற்றோா், மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், சொந்த ஊா் திரும்பிய ராமகிருஷ்ணனுக்கு, கொடை ரோடு ரயில் நிலையத்தில் கிராம மக்கள், உறவினா்கள் சாா்பில் மாலை அணிவித்து மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.