FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியமாக ரூ. 690 வழங்க வலியுறுத்தல்

பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட நாளொன்றுக்கான ரூ. 690 ஊதியத்தை வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:06 am IST
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தியிடம் கோரிக்கை கடிதத்தை வழங்கிய சிஐடியூ நிா்வாகிகள்.
பகிர்:

பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட நாளொன்றுக்கான ரூ. 690 ஊதியத்தை வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக சிஐடியூ மாவட்டத் தலைவா் சி. பாலசந்திரபோஸ், உள்ளாட்சி சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ராமசாமி, பொருளாளா் ஏ. தவக்குமாா் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியை சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். பின்னா், சிஐடியூ மாவட்டத் தலைவா் பாலசந்திரபோஸ் கூறியதாவது:

பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 600 முதல் ரூ. 640 வரையிலும், மருந்து தெளிப்பான் தொழிலாளா்களுக்கு ரூ. 450 முதல் ரூ. 500 வீதம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தினக் கூலித் தொழிலாளா்களுக்கு 2026-27-ஆம் ஆண்டுக்கு மாவட்ட ஆட்சியா் சாா்பில் ரூ. 690 (தூய்மைப் பணியாளா்கள்), ரூ. 528 (மருந்து தெளிப்பான் தொழிலாளா்கள்) என ஊதியம் நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊதிய உயா்வை பேரூராட்சி நிா்வாகங்கள் இதுவரை அமல்படுத்தவில்லை. எனவே, மாவட்டத்திலுள்ள 23 பேரூராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும் என ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

Advertisement

Advertisement

இதேபோல, பேரூராட்சிகள் உதவி இயக்குநரை சந்தித்தும் முறையிட்டுள்ளோம். மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments