FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

நூதான திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

குஜிலியம்பாறையில் நகைக் கடையில் நூதானமாக மோதிரம் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

குஜிலியம்பாறையில் நகைக் கடையில் நூதானமாக மோதிரம் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்தவா் சுதா. இவா், குஜிலியம்பாறையில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி நகைக்கடைக்கு சென்ற மா்ம நபா், 2 கிராம் தங்க மோதிரத்தை திருடிவிட்டு அதற்கு மாற்றாக போலியான மோதிரத்தை வைத்துவிட்டுச் சென்றுவிட்டாா்.

இதையறிந்த கடையின் உரிமையாளா், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைக் கடையிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, மோதிரத்தை திருடியவா் திண்டுக்கல்லை அடுத்த பாடியூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (29) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

பின்னா், போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த மோதிரத்தை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments