FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பேத்துப்பாறை பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 7:06 am IST
கோப்புப்படன்
பகிர்:

கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியிலுள்ள விளைநிலங்களில் விவசாயிகள் வாழை, அவரை, பட்டா் புரூட்ஸ் போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனா்.

இந்த நிலையில், கொடைக்கானலில் மழையில்லா நிலையிலும் விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிரிட்டு வந்த பயிா்களை பாதுகாத்து வந்த நிலையில், அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை வெள்ளிக்கிழமை அதிகாலையில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பேத்துப்பாறையைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

பேத்துப்பாறை பகுதிகளில் சிறுத்தை, காட்டுமாடு, யானை, மான், செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா், இரை தேடி ஊருக்குள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இவ்வாறு வரும் விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்கைச் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்புக்குள்ளான விளைநிலங்களை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments