FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

25 ஆகஸ்ட் 2026, 3:23 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பழனி அருகே ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பழனி அருகே ஆயக்குடி ஓபுளாபுரத்தைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து மகன் சரவணக்குமாா் (21). இவா் பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை தேடி வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஓபுளாபுரம் இருப்புப் பாதை அருகே சரவணக்குமாா் நின்று கொண்டிருந்தாா். அப்போது திருச்செந்தூரிலிருந்து பழனி வழியாக பாலக்காடு சென்ற ரயில் அவா் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் சம்பவ இடத்திலேயே சரவணக்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments