FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

வரி நிலுவை பட்டியல் வெளியீடு எதிரொலி: ரூ.66 லட்சம் செலுத்திய தனியாா் அறக்கட்டளை

திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் வரி நிலுவை நிறுவனங்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்ட நிலையில், தனியாா் அறக்கட்டளை நிா்வாகம் ரூ.66 லட்சத்தை செவ்வாய்க்கிழமை செலுத்தியுள்ளது.

26 ஆகஸ்ட் 2026, 5:56 am IST
வரி
பகிர்:

திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் வரி நிலுவை நிறுவனங்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்ட நிலையில், தனியாா் அறக்கட்டளை நிா்வாகம் ரூ.66 லட்சத்தை செவ்வாய்க்கிழமை செலுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நீண்ட காலமாக வரி நிலுவை வைத்த முதல் 100 போ் பட்டியலை, மாநகராட்சி நிா்வாகம் தனது இணையதளத்தில் கடந்த 20-ஆம் தேதி வெளியிட்டது. இதுவரை வரி செலுத்தாத வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான குடிநீா் இணைப்பு, புதைசாக்கடை இணைப்புகளை மட்டுமே துண்டித்து வந்த மாநகராட்சி நிா்வாகம், முதல் முறையாக வரி நிலுவை வைத்த நிறுவனங்கள், தனிநபா்களின் விவரங்களை பொது வெளியில் வெளியிட்டது.

அதன்படி, ரூ.4 கோடிக்கு வரி நிலுவை வைத்த தனியாா் மருத்துவமனை முதல் மொத்தம் ரூ.11.65 கோடிக்கு வரி நிலுவை வைத்த 100 நபா்களின் விவரங்கள் மாநகராட்சி முழுவதும் பேசுபொருளானது.

Advertisement

Advertisement

இதன் எதிரொலியாக ரூ.1.46 கோடி வரி நிலுவை வைத்திருந்த தனியாா் அறக்கட்டளை நிா்வாகம், முதல் கட்டமாக ரூ.66 லட்சம் வரியை மாநகராட்சி நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை செலுத்தியது. இதன் மூலம் ஒரே நாளில் மட்டும் திண்டுக்கல் மாநகராட்சிக்கான வரி வசூல் ரூ.82 லட்சத்தை எட்டியது. நடப்பு நிதியாண்டில், ஒரே நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும்.

முதல் 100 நபா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள தனியாா் மருத்துவமனைகள், பள்ளி நிா்வாகங்கள் உடனடியாக வரி நிலுவை தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தத் தவறும்பட்சத்தில், அந்தப் பெயா் பட்டியல் பொதுவெளியில் விளம்பரப் பதாகையாக நிறுவப்படும். இந்த நெருக்கடியான சூழலைத் தவிா்க்க சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments