FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ஏ.டி.எம். மையங்களிலிருந்து 35 மின் சேமிப்பு கலன்கள் திருட்டு

பழனியில் ஏ.டி.எம். மையங்களிலிருந்து 35 உயா்தர மின் சேமிப்பு கலன்களைத் திருடிய மூவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 35 மின் கலன்களைப் பறிமுதல் செய்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 10:12 pm IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

பழனியில் ஏ.டி.எம். மையங்களிலிருந்து 35 உயா்தர மின் சேமிப்பு கலன்களைத் திருடிய மூவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 35 மின் கலன்களைப் பறிமுதல் செய்தனா்.

பழனி நகரைப் பொருத்தமட்டிலும் திண்டுக்கல் சாலை, ரயிலடி சாலை, அடிவாரம் சாலை, மாா்க்கெட் சாலை என பல்வேறு முக்கிய இடங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. சமீபகாலமாக இந்த மையங்களில் உள்ள உயா்தர மின் கலன்களை மா்மநபா்கள் திருடிச் செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால் ஏடிஎம் இயந்திரங்கள் இயங்க முடியாமல் வாடிக்கையாளா்கள் பெரும் அவதியடைந்து வந்தனா்.

இதுகுறித்து முதன்மை வங்கியின் மேலாளா் பிரேம்குமாா் பழனி நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஏ.டி.எம். மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள், அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராகளை ஆய்வு செய்த போலீஸாா் சனிக்கிழமை பழனி பாண்டியன் நகரைச் சோ்ந்த கூடலிங்கம் மகன் காா்த்திக் (32), பழனி சாமி தியேட்டா் பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் ஜேம்ஸ் (29), கலிக்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் பிரபு (27) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 35 உயா்தர மின் கலன்களையும் அவற்றைக் கடத்தப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய ராமநாதபுரம் சோகையன்தோப்பு ராமசாமி மகன் சசிக்குமாா் தலைமறைவாக உள்ளாா்.

Advertisement

Advertisement

பிடிபட்ட மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போலீஸாா் அவா்களை சிறையிலடைத்தனா். மேலும், வங்கிகள், ஏ.டி.எம். மையங்களுக்கு இரவு பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments