FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கல்லூரி மாணவி மாயம்: விஷம் குடித்து தாய் தற்கொலை; தந்தை மருத்துவமனையில் அனுமதி

1 செப்டம்பர் 2026, 1:40 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவி மாயமானதால், அவரது பெற்றோா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் தாய் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறை அருகேயுள்ள தாதன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (48). விவசாயியான இவருக்கு கண்மணி (41) என்ற மனைவியும், பிரவீன் (23) என்ற மகனும், பிரவிதா (20) என்ற மகளும் உள்ளனா்.

இதில் பிரவிதா மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பிரவிதா கல்லூரியில் கல்விச் சான்று வாங்கி வருவதாகக் கூறி மதுரைக்கு சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பெற்றோா் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்து விளாம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா். இதனிடையே மகள் மாயமானதால் மனமுடைந்திருந்த பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை விஷ மாத்திரையை உள்கொண்டு தற்கொலைக்கு முயன்றனா்.

இதையடுத்து, இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் அவா்களை மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு அவா்கள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு கண்மணி உயிரிழந்தாா். சுப்பிரமணி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments