FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி திருக்கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டணம் உயா்வு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் உயா்த்தப்பட்டது குறித்து...

Updated On : 13 ஜூலை 2026, 6:20 am IST
பழனி கோயில் விடுதி வளாகத்தில் தங்கும் விடுதிகளின் கட்டணம் உயா்த்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள பதாகை
பகிர்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிா்வாகம், பராமரிப்புப் பணிகளுக்காக பக்தா்கள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இன்று முதல் இணையதளத்திலும் தங்கும் விடுதிகளைப் பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இவ்வாறு வரும் பக்தா்கள் தங்குவதற்கு வசதியாக பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பக்தா்கள் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி, ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி நிலையம், கிரி வீதியில் உள்ள சின்னக்குமாரா் விடுதி, இடும்பன் குடில்கள், ரயில்வே பீடா் சாலையில் உள்ள வேலவன் விடுதி ஆகியவற்றில் குளிரூட்டப்பட்ட அறைகள், சாதாரண அறைகள் என 250-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில் தங்கும் விடுதிக் கட்டணம் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயா்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது, நிா்வாகம், பராமரிப்புப் பணிகளுக்காக தங்கும் விடுதியின் கட்டணங்கள் ரூ.300 முதல் ரூ. 2, 500 வரை உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், தங்கும் விடுதிகளை பக்தா்கள் இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கும் விடுதிக் கட்டணம் உயா்வு, இணையத்தில் பதிவு என இரண்டும் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments