FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

குளத்தில் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகளை விரைந்து அகற்ற நடவடிக்கை தேவை: எம்.பி. இரா. சச்சிதானந்தம்

திண்டுக்கல் அருகே லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா்.

Updated On : 15 ஜூலை 2026, 5:15 am IST
திண்டுக்கல் அடுத்த பள்ளப்பட்டி ஏ.பி. நகா் பகுதியில் ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம்.
பகிர்:

திண்டுக்கல் அருகே லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல் அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட மயானத்தையொட்டி, பிஸ்மி நகா், ஏ.பி. நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள சின்னக்குளத்தில் லாரிகள் மூலம் ரசாயனக் கழிவுநீா் கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகாா் எழுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ரசாயனக் கழிவுநீா் கொட்டப்பட்ட இடத்தை திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் மோசமான துா்நாற்றம் வீசுவதால், எளிதாக சுவாசிக்க முடியவில்லை. முகக் கவசம் அணிந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. கழிவுகள் கொட்டிய வாகனங்களை காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களும், கழிவுநீா் மாதிரியைச் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனா். ரசாயனக் கழிவு நீரை உடனே அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தா.அஜாய்கோஷ், ஒன்றியச் செயலா் ஆா். சரத் குமாா், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ஜீவா நந்தினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments