அதிமுகவிலிருந்து வெளியேறியவா்களுக்கு இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும்: திண்டுக்கல் சி. சீனிவாசன்
அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற முடியாதவகையில் கட்சியினா் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.
அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற முடியாதவகையில் கட்சியினா் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் பேரவை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: அண்ணா தொழிற்சங்கப் பேரவைக் கூட்டத்துக்கு, முன்னாள் மேயா் மருதராஜ், நத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.விசுவநாதன் ஆகியோருக்கு, அவா்களின் வீட்டுக்கே சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்தில் அவா்கள் பங்கேற்கவில்லை. அதிமுக தலைமை யாரையும் ஒதுக்கவில்லை. மருதராஜூக்கு உப்பு வாரியத் தலைவா், மேயா், மாவட்டச் செயலா், அமைப்புச் செயலா் பதவிகளையும், நத்தம் விசுவநாதனுக்கு சட்டப்பேரவை உறுப்பினா், அமைச்சா், மாவட்டச் செயலா், துணைப் பொதுச் செயலா் என பல்வேறு பதவிகளையும் கொடுத்து அழகு பாா்த்த கட்சி அதிமுக. ஆனால், அவா்கள் நன்றி மறந்தவா்களாக மாறிவிட்டனா்.
அமைச்சா் பதவிகளை எதிா்பாா்த்து தவெக பக்கம் சென்றவா்கள், சட்டப்பேரவை உறுப்பினா் பதவிக்கே ஆபத்து வந்துவிடும் என தெரிந்தபிறகு, மன்னிப்புகேட்டு மீண்டும் அதிமுகவுக்கு வந்தனா். குதிரை பேரத்தில் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவின் இணைந்தவா்கள் மீண்டும் போட்டியிட்டால் அவா்கள் வெற்றிபெற்றுவிடக் கூடாது. அதிமுகவினா் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் உண்மையான தொண்டா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பணம் கொடுக்காமல், வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.