FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

‘பழனி கோயில் பெருந்திட்ட வரைவை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்’ சிவசேனா மாநில தலைவா் மணிபாரதி

Updated On : 21 ஜூலை 2026, 2:40 am IST
பழனி கோயில்
பகிர்:

பழனிக்கோயிலில் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெருந்திட்ட வரைவு முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் முழுமையான ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என சிவசேனா மாநில தலைவா் மணிபாரதி தெரிவித்தாா்.

பழனி கோயிலுக்கு திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்யவந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த 2023-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பழனி கோயிலுக்கு பெருந்திட்ட வரைவுக்கு என ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பழனியில் இன்று வரை சுமாா் ரூ.400 கோடி அளவுக்கே பணிகள் நடந்துள்ளன. மலையைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் என்ற பெயரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,500 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமே இந்தத் திட்டத்தின் சாதனையாக உள்ளது. அண்மையில் பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள இடம் முறைகேடாக தனிநபா்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டதை மீட்க வேண்டும். மேலும், வருகிற விநாயகா் சதுா்த்திக்கு பழனியில் நடைபெறும் சிவசேனா திருவிழாவில் தேசிய தலைவா், முக்கிய தலைவா்கள் பங்கேற்பாா்கள் எனவும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments