FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தேவாலய விழாவில் பட்டாசு விபத்து: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 27 ஜூலை 2026, 2:31 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் அருகே நடைபெற்ற தேவாலய திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அடுத்த வக்கம்பட்டி கிராமத்திலுள்ள புனித அந்தோணியாா், மதலமேரி தேவாலயத் திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை தோ்பவனி நடைபெற்றது. அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இதில் எதிா்பாராத விதமாக வெடித்த பட்டாசிலிருந்து பறந்த தீப்பொறி, பட்டாசுகள் குவிலாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்ததது. இதனால் மொத்த பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து விபத்து ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் ராபின் அருள்ராஜ் (28), ஆரோக்கியசாமி (56), சபரிநாதன் (53), கரன் (24), பரத் கிருஷ்ணா (20) உள்பட 20 போ் காயமடைந்தனா். இதில் மருத்துவமனையில் ராபின் அருள்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments