கொடைக்கானலில் கஞ்சா விற்ற நால்வா் கைது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியாா் சொகுசு விடுதியில் சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த நான்கு பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் திங்கள்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொடைக்கானல் மேல் மலைக் கிராமமான பூம்பாறையில் உள்ள தனியாா் சொகுசு விடுதியில் அண்மையில் கொக்கைன், போதை ஸ்டாம்ப், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை தனிப்படை காவலா்கள் பறிமுதல் செய்து விடுதி உரிமையாளா் போதி சாத்விக் நாத் என்பவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
அதே சொகுசு விடுதியில் திண்டுக்கல் தனிப்படை காவலா்கள் மீண்டும் சோதனை மேற்கொண்டனா்.
இதில், பொன்னமராவதியைச் சோ்ந்த ராமையா மகன் விக்னேஷ்வரன்(31), சென்னையச் சோ்ந்த அசோக் மகன் ஹரிகரன் (27), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சோ்ந்த சுமேஷ் (22), தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சோ்ந்த கோபி ராமதாஸ் மகன் பிருத்வி ராஜ் (28) ஆகிய நான்கு பேரிடம் இருந்த 500 கிராம் கஞ்சா, 48 போதை ஸ்டாம்ப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 3 லட்சமாகும். மேலும் இந்த சொகுசு விடுதியிலிருந்து புதிய செயலிகளைப் பயன்படுத்தி போதை பொருள்கள் விற்றுவந்தனா். தொடா்ந்து தனியாா் சொகுசு விடுதி பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், போதைப் பொருள்கள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.