வடமதுரை காவல் நிலையம் முற்றுகை: 160 மாற்றுத் திறனாளிகள் கைது
மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் புகாா் மனுக்களை அலட்சியப்படுத்துவதாகக் கூறி, வடமதுரை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 160 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் புகாா் மனுக்களை அலட்சியப்படுத்துவதாகக் கூறி, வடமதுரை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 160 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பகத்சிங் முன்னிலை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது வடமதுரை காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்புச் செய்கின்றனா். இதனால், மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பற்றச் சூழல் நிலவுகிறது. அலட்சியமாக செயல்படும் வடமதுரை போலீஸாா் மீது மாவட்ட காவல் துறை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.
Advertisement
Advertisement
இந்த முற்றுகைப் போராட்டத்தின்போது காவல் துறைக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 160-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.