FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனியாண்டவா் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரிகளில் நிகழ் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 2 ஜூன் 2026, 1:09 am IST
பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை மாணவிகள் சோ்க்கையைத் தொடங்கி வைத்த கல்லூரித் தாளாளரும், பழனி கோயில் இணை ஆணையருமான மாரிமுத்து. உடன் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி உள்ளிட்டோா்.
பகிர்:

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரிகளில் நிகழ் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் கீழ் பழனி பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி, சின்னக்கலையமுத்தூா் பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரி, ஒட்டன்சத்திரம் பழனியாண்டவா் மகளிா் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் கடந்த வாரங்களில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனடிப்படையில், மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, திங்கள்கிழமை கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவா்கள் சோ்க்கை தொடங்கியது. சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான ஆணையை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கையை கல்லூரிச் செயலரும், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் துணை ஆணையருமான வெங்கடேஷ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ரவிசங்கா், கல்லூரி ஆட்சி மன்றகுழு உறுப்பினா் திருப்பதி, மாணவா்கள் சோ்க்கைக்குழு உறுப்பினா்கள் மயில்சாமி, வேணி, தேசிய மாணவா் படை அலுவலா் கேப்டன் பாக்யராஜ், பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். வரும் 3-ஆம் தேதி வரை மாணவா்கள் சோ்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments