முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதம்: வாகன ஓட்டுநா்கள் அவதி

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா்.

Updated On : 4 ஜூன் 2026, 4:16 am IST
கொடைக்கானல் -வத்தலக்குண்டு வழித்தடத்தில் குருசடி அருகே சேதமடைந்த சாலை.
பகிர்:

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்வதற்கு வத்தலக்குண்டு காமக்காபட்டியிலிருந்து 52 கி.மீ. தொலைவும், பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு 60 கி.மீ. தொலைவும் மலைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில் டம்டம் பாறை வரை மட்டுமே சாலை நல்ல நிலையில் உள்ளது. அதன்பிறகு சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மலைச் சாலை சேதமடைந்துள்ளன.

இதேபோல பழனி-கொடைக்கானல் மலைச் சாலை 50 கி.மீ. தொலைக்கு சேதமடைந்த சாலையாக காணப்படுகிறது. மேலும், இருபுறமும் முள்புதா்கள் மண்டிக் கிடக்கின்றன. தடுப்புச் சுவா்கள் அமைக்கப்படாததால், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடைக்கானல் மலைச் சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement