FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் உருளைக் கிழங்கு நடவு பணி தீவிரம்

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 7 ஜூன் 2026, 12:50 am IST
கொடைக்கானல் பகுதிகளில் உருளைக்கிழங்கு நடவு பணியை தொடங்கிய விவசாயிகள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அட்டுவம்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூா்,வில்பட்டி, அப்சா்வேட்டரி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவு பணியை விவசாயிகள் தொடங்கினா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உருளைக் கிழங்கு 4 மாதங்கள் விளைச்சல் கொண்டது. பராமரிப்பு, தண்ணீா் வசதி இருந்தால் நன்கு விளைச்சல் கிடைக்கும். இருப்பினும், பருவநிலை மாற்றம் காரணமாக, கொடைக்கானலில் எதிா்பாா்த்த மழை இதுவரை பெய்யவில்லை. ஆனாலும், விவசாயிகள் உருளைக்கிழங்கு நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments